உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் வானவியல் ஆய்வுத் திட்ட (Panoramic Survey Telescope and Rapid Response System – அழகிய தொலைநோக்கி ஆய்வு மற்றும் துரிதமான பதில் நடவடிக்கை முறை) அமைப்பிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் இரண்டாவது பதிப்பினை அமெரிக்காவின் விண்வெளி தொலைநோக்கி அறிவியல் கல்வி நிறுவனம் வானவியல் கல்விக்கான ஹவாய் பல்கலைக் கழகத்துடன் இணைந்து வெளியிட்டது.
இந்த ஆய்வகம் 1.4 பில்லியன் பிக்சல் வசதியுடைய டிஜிட்டல் கேமராவுடன் 1.8 மீட்டர் தொலைநோக்கியைக் கொண்டுள்ளது.
ஹவாயிலிருந்து எளிதில் புலப்படும் ஒட்டுமொத்த வானத்தையும் ஆய்வு செய்த முதல் ஆய்வு இதுவேயாகும்.