உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியின் பாகங்கள் உற்பத்தி
September 22 , 2020 1529 days 678 0
உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியானது இந்தியாவின் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தினால் (TCS - Tata Consultancy Services) இந்தியாவில் கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுக் கட்டமைக்கப் படுகின்றது.
TCS தலைமையின் கீழ் செயல்படும் இந்தத் திட்டத்திற்கு முன்னணியில் உள்ள பல்வேறு இந்திய அறிவியல் நிறுவனங்கள் இணைந்து பங்காற்றுகின்றன.
டாடா அடிப்படை ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்படும் தேசிய ரேடியோ வான் இயற்பியல் மையமானது இந்தத் திட்டத்தின் தலைமை மேலாளராகச் செயல்படுகின்றது.
இந்தத் தொலைநோக்கியானது “சதுர கிலோமீட்டர் தொகுப்பு” (SKA - square kilometre array) என்று அழைக்கப்படுகின்றது.
இந்தத் தொலைநோக்கியானது தென் ஆப்பிரிக்காவில் கட்டமைக்கப்பட உள்ளது.
இதன் இதர வெளி நிலையங்கள் கானா, போட்ஸ்வானா, கென்யா, மொரீஷியஸ், மடகாஸ்கர், மொசாம்பிக், ஜாம்பியா மற்றும் நமீபியா ஆகிய இதர 8 பங்காளர் நாடுகளில் அமையவுள்ளது.
இந்தத் தொலைநோக்கியின் குறைந்த அதிர்வெண் வரிசையானது மேற்கு ஆஸ்திரேலியாவில் கட்டமைக்கப்படவுள்ளது.