இலண்டன் விலங்கியல் சமூகமானது வோரோம்பி டைட்டன் என்னும் பறவையை உலகின் மிகப்பெரிய பறவையாக அறிவித்துள்ளது.
வோரோம்பி டைட்டன் (மலகாசி மற்றும் கிரீக் மொழியில் பெரிய பறவை என்று பொருள்) என்னும் பறவையானது 800 கிலோ எடையையும் 3 மீட்டர் உயரத்தையும் கொண்டது என்று நம்பப்படுகிறது.
இது ஒரு மறைந்த மடகாஸ்கன் இனமாகும். மேலும் இது “எலிபெண்ட் பறவை” வகையைச் சேர்ந்ததாகும்.
“எலிபெண்ட் பறவைகள்” (அபியோரினிதிடே வகுப்பைச் சார்ந்தது) தற்கால தாவர விலங்கினங்கள் தோன்றிய காலத்திற்குப் பிறகு மடகாஸ்கரில் வாழ்ந்து மறைந்த பெரிய இறக்கையில்லாப் பறவையாகும்.