மெசிப்டெரிஸ் ஆப்லான்சியோலாட்டா எனப்படும் ஃபோர்க் ஃபெர்ன் இனமானது, முந்தையதாக பெரிய மரபணுவினைக் கொண்டதாக பதிவான இனத்தினை விட 7% பெரியது மற்றும் மனித மரபணுவை விட 50 மடங்கு பெரிய மரபணுவைக் கொண்டு உள்ளது.
ஜப்பானிய பூக்கும் தாவரமான பாரிஸ் ஜபோனிகா தான் இதற்கு முன்னதாக பெரிய மரபணுவினைக் கொண்டதாக பதிவான இனமாகும்.
பெரிய மரபணுக்களுக்கு என்று டிஎன்ஏ பிரதி எடுப்பதற்கு, சரிபார்த்தல் மற்றும் படியெடுத்தல் ஆகியவற்றிற்கு அதிக மூலங்கள் தேவைப்படுகின்றன.
மரபணு ஆனது ஓர் உயிரினத்தின் அனைத்து மரபணுத் தகவல்களையும் கொண்டு உள்ளது.
ஓர் உயிரினத்தின் உடல் அளவிற்கும் அதன் மரபணு அளவிற்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை.
சிறிய ஃபெர்ன் இனத்தின் மரபணு நீலத் திமிங்கலத்தை விட 6,000% பெரியது மற்றும் ஆப்பிரிக்க யானையை விட 4,650% பெரியது ஆகும்.