செவ்வாய் கிரகத்தினை நோக்கி எலான் மஸ்க் தலையிலான ஸ்பேஸ் எக்ஸ் (Space X) நிறுவனம் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பால்கான் ஹெவி (Falcon Heavy) செயல்பாட்டு ராக்கெட் ஒன்றை அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஏவியுள்ளது.
மேலும் டெஸ்லா நிறுவனத்தின் Roadster என்ற கார் ஒன்றையும் இந்த ராக்கெட் சுமந்து சென்றுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் ஆனது அமெரிக்காவின் தனியார் ஏரோஸ்பேஸ் தயாரிப்பு நிறுவனமாகும்.
பால்கான் ஹெவி ராக்கெட்டானது மீண்டும் பயன்படுத்தத்தக்க (Reusable) உலகின் மிகவும் சக்தி வாய்ந்த செயல்பாட்டு ராக்கெட்டாகும்.
இதுவரை உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட்டாக அறியப்படும் நாசாவின் டெல்டா 4 ராக்கெட்டுக்கான செலவின் மூன்றில் ஒரு பாக செலவை மட்டுமே உடைய பால்கான் ஹெவி ராக்கெட்டானது தன் எடையைக் காட்டிலும் இரு மடங்கு அதிக எடையை சுமந்து செல்ல வல்லது.
பால்கான் ஹெவி ராக்கெட்டின் மூன்று முதல் நிலை உந்திகளும் (Booster) மீண்டும் பயன்படுத்தத்தக்கவை.
இந்தியாவில் 2016-ஆம் ஆண்டு இஸ்ரோவினால் மீண்டும் பயன்படுத்தத்தக்க ராக்கெட்டுகள் (Reusable launch vehicle – Technology demonstrator) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.