ஃபைனான்ஸ் எனப்படும் தயாரிப்பு நிறுவன மதிப்பீட்டு ஆலோசக நிறுவனத்தின் அறிக்கையின்படி, அமேசான் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்த அறிக்கையின் பெயர் "உலகின் முன்னணி 500 தயாரிப்பு நிறுவனங்கள் 2023" ஆகும்.
ஆப்பிள் உலகின் இரண்டாவது மிக மதிப்புமிக்க நிறுவனமாக தரவரிசைப்படுத்தப் பட்டுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் இதில் இடம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு 78 ஆக இருந்த இந்தியாவின் டாடா குழுமத்தின் நிறுவன மதிப்ப்பீட்டுத் தரவரிசையானது 69 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனங்களில், கடந்த ஆண்டு 158வது இடத்திலிருந்த இன்ஃபோசிஸ் நிறுவனம் 150வது இடத்திற்கு முன்னேறியது.