TNPSC Thervupettagam

உலகின் மிகவும் மாசுபாடடைந்த நகரங்கள் பட்டியல்

May 5 , 2018 2300 days 748 0
  • உலக சுகாதார நிறுவனத்தினால் (World Health Organization-WHO) அண்மையில் வெளியிடப்பட்டுள்ள உலகளாவிய நகர்புறகாற்று மாசுபாடு தரவுதளத்தின்படி (Global Urban Air Pollution database), 2016-ஆம் ஆண்டு உலக நகரங்களின் சுற்றுப்புறத்தில் நிலவிய5 நுண் மாசுத் துகள்களின் (Particulate Matter-PM 2.5) அளவின் அடிப்படையில் உலகின் மிகவும் மாசுபாடடைந்த 20 நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
  • உலகின் மிகவும் மாசுபாடடைந்த 20 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 14 இந்திய நகரங்களாவன: டெல்லி, வாரணாசி, கான்பூர், பரிதாபாத், கயா, பாட்னா, ஆக்ரா, முஜாபர்பூர், ஸ்ரீநகர், கூர்கான், ஜெய்ப்பூர், பாட்டியாலா, ஜோத்பூர் ஆகியனவாகும்.
  • இப்பட்டியலில் குவைத் நாட்டின் அலி சுபாவர் அல்-சலேம் (Ali Subah Al-Salem) நகரம் மற்றும் சீனா மற்றும் மங்கோலியாவின் சில நகரங்களை அடுத்து இந்த 14 இந்திய நகரங்கள் காணப்படுகின்றன.
  • நுண்மாசுத் துகள்கள் 10 (PARTICULATE MATTER -PM 10) அளவின் அடிப்படையில் உலகின் மிகவும் மாசுபாடடைந்த 20 நகரங்கள் பட்டியலில் 13 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
  • 14 மில்லியன் அல்லது அதற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட உலகின் மெகா நகரங்களின் காற்றுத்தரம் குறித்த தரவுகளை (air quality data for mega-cities) உலக சுகாதார நிறுவனம் தொகுத்துள்ளது.
  • உலக சுகாதார நிறுவனத்தினுடைய இந்த அறிக்கையில் உள்ள புதிய தரவுகளானது, உயர்ந்த அளவில் மாசுபடுத்திகளைக் (pollutants) கொண்ட காற்றினை உலகில் 10 நபர்களுள் 9பேர் சுவாசிக்கின்றனர் என தெரிவித்துள்ளது.
  • மாசுபட்ட காற்றில் உள்ள நுண் துகள்களானது சுவாசித்தலின் மூலம் மனிதர்களின் நுரையீரல், இருதய வால்வு அமைப்புகளில் ஆழமாக உட்புகுகின்றன. இவை இருதய நோய்கள், நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் அடைப்பு நோய்கள், நிமோனியா உட்பட பிறசுவாச கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.
  • உலக சுகாதார நிறுவனமானது காற்று மாசுபாட்டை தொற்றா நோய்களுக்கு முக்கியமான ஆபத்து காரணியாகஅ ங்கீகரித்துள்ளது (critical risk factor for non-communicable diseases).
  • காற்று மாசுபாடானது வயதுவந்தோரில் இருதயநோய்களினால் 24சதவீதத்தினரின் இறப்புக்கும், நுரையீரல் தடுப்பு சுவாச நோய்களினால் (chronic obstructive pulmonary disease) 43 சதவீதத்தினரின் இறப்புக்கும், நுரையீரல் புற்றுநோயினால் 29 சதவீதத்தினரின் இறப்புக்கும் காரணமாகின்றது என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்