TNPSC Thervupettagam

உலகின் மிகவும் விலையுயர்ந்த கால்நடை

March 10 , 2025 23 days 169 0
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பசுவானது, உலகின் மிகவும் விலையுயர்ந்த கால்நடையாக உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு பிரேசிலின் மினாஸ் ஜெரைஸில் நடைபெற்ற ஏலத்தில் வியாடினா-19 என்ற பசுவானது 40 கோடி ரூபாய்க்கு மேலான விலையில் விற்கப்பட்டது.
  • இந்தப் பசுவின் எடை சுமார் 1,101 கிலோவாகும் என்பதோடு இது நெல்லூர் இனத்தைச் சேர்ந்த மற்ற பசுக்களின் சராசரி எடையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
  • ஓங்கோல் இனம் என்றும் அழைக்கப்படுகின்ற இந்த வியாடினா-19 ஆனது நெல்லூர் இனத்தைச் சேர்ந்ததோடு இது முதன்முதலில் 1800 ஆம் ஆண்டுகளில் பிரேசிலுக்கு கொண்டு வரப்பட்டது.
  • இந்த வியடினா-19 ஆனது, டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த் நகரில் நடைபெற்ற "உலக சாம்பியன்" போட்டியில் மிஸ் தென் அமெரிக்கா பட்டத்தினை வென்றது.
  • வெப்பமண்டலப் பருவநிலைக்கு ஏற்ற ஒரு தகவமைப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்ற அதன் திறனுக்காக நெல்லூர் இனம் நன்கு அறியப்பட்டதாகும்.
  • பிரேசில் நாடானது, தற்போது நெல்லூர் கால்நடைகளை அதிகளவில் இனப்பெருக்கம் செய்யும் உலகின் மிகப்பெரிய நாடாகும்.
  • இந்த வகை இனம் ஆனது அர்ஜென்டினா, பராகுவே, வெனிசுலா, மத்திய அமெரிக்கா, மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
  • பிரேசிலில் உள்ள பசுக்களில் குறைந்தது 80 சதவீதம் ஆனது ஜெபு கால்நடைகள் ஆகும் என்ற நிலையில் இது இந்தியாவில் தோன்றிய ஒரு கிளையினமாகும் என்பதோடு இது அதன் திமில் மற்றும் அசை தாடி ஆகியவற்றினால் வேறுபடுத்தி பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்