உலகின் மிக உயரமான நடராஜர் சிலை
September 11 , 2023
315 days
230
- G20 உச்சி மாநாடு நடைபெறும் இடமான, ‘பாரத் மண்டபத்தில்,’ பீடம் உட்பட 28 அடி உயரம் கொண்ட உலகின் மிக உயரமான ‘நடராஜர்’ சிலை’ நிறுவப் பட்டுள்ளது.
- இந்த ‘நடராஜர்’ சிலையானது மெழுகு அச்சு வார்ப்புச் செயல்முறை எனப்படும் பண்டையச் சோழர் கால வார்ப்பு நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டது.
- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நுட்பம் ஆனது, புகழ்பெற்ற சோழர்களின் வெண்கலச் சிலைகளை உருவாக்குவதற்குப் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்த அற்புதமான அஷ்டதாது (எட்டு உலோகங்களின் கலவை) சிற்பம் ஆனது, தமிழ்நாட்டின் சுவாமிமலைப் பகுதியைச் சேர்ந்த சிற்பிகளால் வடிவமைக்கப் பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/11-560.jpg)
Post Views:
230