தேசிய புவியியல் சங்கமானது எவரெஸ்ட் சிகரத்தில் உலகின் மிக உயரத்தில் செயல்படும் வானிலை மையங்களை நிறுவியுள்ளது.
இது ஆராய்ச்சியாளர்கள், மலையேறுபவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மலையின் நிலைமைகளைப் பற்றி நிகழ்நேரத் தகவல்களை வழங்கும்.
இந்தக் குழுவானது உலகின் மிக உயரத்தில் செயல்படும் இரண்டு தானியங்கி வானிலை மையங்களை பால்கனி (8430 மீட்டர்) தெற்கு கணவாய் ஆகிய பகுதிகளிலும் (7945) அதனுடன் சேர்த்து இதர 3 வானிலை மையங்களையும் எவரெஸ்டில் நிறுவியுள்ளது.
போர்ட்சே (3810மீ), எவரெஸ்ட் அடித்தள முகாம் (5315 மீ) மற்றும் இரண்டாம் முகாம் (6464மீ) ஆகியவை இதர மூன்று நிலையங்களாகும்.