சவுதி அரேபியா மக்காவின் பெரிய மசூதிக்குச் செல்லும் சாலையான கிங் அப்துல் அஜிஸ் தெருவில் உலகின் மிக நீளமான சித்திரச் சுவரோவியத்தினை நிறுவியுள்ளது.
கலைஞர் அமல் ஃபெலம்பன் என்பவர் வடிவமைத்த இந்த 75 மீட்டர் நீளமுள்ள சுவரோவியமானது, சாதனைச் சிற்பங்கள் மற்றும் கட்டிடங்களின் பட்டியலில் இணைகிறது.
இந்தச் சுவரோவியம் ஆனது அந்நாட்டு மக்களின் பாரம்பரியம், கருத்துக்கள் மற்றும் பல ஆண்டு கால வரலாறு ஆகியவை முழுவதும் பறைசாற்றும் வகையில் அழகினை வெளிப்படுத்துகிறது.