உலகின் மிக வயதான பெரிய ஆண் பாண்டா
July 25 , 2022
727 days
363
- ஹாங்காங் உயிரியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த உலகின் மிக வயதான இராட்சத வகை ஆண் பாண்டா தனது 35 வயதில் இறந்தது.
- ஆன் ஆன் என்று அழைக்கப்படும் இந்த பாண்டா, அதன் 35 வயதில் கருணைக் கொலை செய்யப்பட்டது.
- இது ஒரு மனிதன் 105 வரை உயிர் வாழ்வதற்குச் சமமாகும்.
- ஆன் என்ற இந்த பாண்டாவானது, அதன் இணையான ஜியா ஜியாவுடன் சேர்ந்து, 1999 ஆம் ஆண்டில் சீனாவின் மத்திய அரசினால் ஹாங்காங்கிற்குப் பரிசாக வழங்கப் பட்டது.
- இந்தப் பாண்டாவின் பெண் துணையான, ஜியா ஜியா, 2016 ஆம் ஆண்டில் அதன் 38 வயதில் இறந்தது.
- உயிரியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மிக வயதான பெண் பாண்டா என்று இது குறிப்பிடப்பட்டது.
- காடுகளில் வாழும் போது இந்த உயிரினங்களின் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டுகளுக்கும் குறைவு என கூறப்படுகிறது.
Post Views:
363