இந்தியா காபி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் ஆசியாவின் 3வது பெரிய நாடு ஆகும்.
தற்போது உலகின் மிகவும் விலையுயர்ந்த காபியான, புனுகுப் பூனையின் (Civet Cat) செரிமானக் கழிவில் இருந்து பெறப்படும் காபியை சிறிய அளவில் கர்நாடகத்தின் கூர்க் மாவட்டத்தில் இந்தியா உற்பத்தி செய்ய உள்ளது.
சிவெட் காப்பி, லூவார்க் காப்பி எனவும் அழைக்கப்படும் இக்காப்பியானது பொது வழக்கத்தில் இல்லாத உற்பத்தி முறையில் பிரித்தெடுக்கப்படுவதால் (Extract) விலை உயர்ந்ததாகும்
இந்தக் காப்பி கொட்டைகள் புனுகுப் பூனைகள் தின்று செரித்து வெளியிடும் மீதிகளை சேகரித்து, செயல்முறைப் படுத்தப்பட்டு (Processed) தயாரிக்கப்படுகின்றது.