TNPSC Thervupettagam

உலகின் முதன் பித்தளை ஒப்பந்தப் பத்திரங்கள்

March 24 , 2018 2291 days 734 0
  • நாட்டின் மிகப்பெரிய இந்திய பல்பொருள் வர்த்தகச் சந்தையான  இந்திய பல்பொருள் வர்த்தகச் சந்தை (Multi Commodity Exchange of India - MCX) உலகில் முதன் முறையாக பித்தளையில் ஒப்பந்த வர்த்தகத்தை (Futures Trading In Brass) தொடங்கியுள்ளது. இது பித்தளை பங்குதாரர்களுக்கு அவர்களுடைய விலைப் பிரச்சினைலிருந்து (Price risk) அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள (to hedge)  வழிவகை செய்யும்.
  • இது பங்குதாரர்களுக்கு அமைப்பு சார்ந்த மற்றும் வலுவான விலை மீட்பு தளத்தை (Price recovery Platform) வழங்கும்.
  • இந்திய பல்பொருள் வர்த்தகச்   சந்தையின்  பித்தளை ஒப்பந்தமானது முதல் இரும்பல்லாத கட்டாய விநியோகத் தேர்வுடன் கூடிய ஒப்பந்தமாகும்.
  • ஜாம் நகரிலுள்ள ஒரு உலோகக் கிடங்கின் (விநியோக மையம்) விதிகளின்படி GSTயைத் தவிர்த்து, வரிகளை (Taxes, Duties) உள்ளடக்கிய அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

பல்பொருள் வர்த்தகச் சந்தை  

  • பல்பொருள் வர்த்தகச் சந்தை  நவம்பர் 2003ல் தொடங்கப்பட்டது. இது SEBIயின் கீழ் முன்னெடுப்பு ஒப்பந்தங்கள் ஒழுங்குமுறைச் சட்டம் 1952ன் ஒழுங்குமுறைக் கட்டமைப்பில் செயல்படுகிறது.
  • பல்பொருள் வர்த்தகச் சந்தையானது நாட்டின் முதல் பட்டியலிடப்பட்ட பல் பொருட்களின் ஒப்பந்தங்களை (Futures) வர்த்தகம் செய்யும் சந்தை ஆகும். இது நேரடி (Online) வர்த்தகம், பொருட்களின் ஒப்பந்தங்களின் பரிவர்த்தனையில் தீர்வு காண்பது ஆகிய வசதிகளை ஏற்படுத்தித் தரும். அதன் மூலம் பிரச்சினை மேலாண்மைக்கான  வசதியை அளிக்கிறது.
  • உலகளவில் பல்பொருள் வர்த்தகச் சந்தை வெள்ளியில் முதலிடத்திலும், இயற்கை எரிவாயுவில் 2ஆம் இடத்திலும், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் ஆகியவற்றில் 3ம் இடத்திலும் ஒப்பந்தப் பரிவர்த்தனையில் உள்ளது.
  • பல்பொருள் வர்த்தகச் சந்தை தங்கம், இரும்பு, இரும்பில்லாதவை, ஆற்றல் மற்றும் பலதரப்பட்ட வேளாண் பொருட்கள் ஆகியவற்றில் ஒப்பந்த கால வர்த்தகத்தை அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்