சீனாவின் தனியார் நிறுவனமான ஆரிஜின் ஸ்பேஸ் ஆனது 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உலகின் முதலாவது குறுங்கோள் சுரங்க இயந்திர மனிதனை விண்வெளிக்குச் செலுத்தத் தயாராக உள்ளது.
இந்த இயந்திர மனிதனானது சீனாவில் உள்ள விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனத்தினால் “குறுங்கோள் சுரங்க இயந்திர மனிதன்” (‘Asteroid mining robot’) என்று பெயரிடப் பட்டுள்ளது.
சீனாவின் லாங் மார்ச் தொடர் ஏவு வாகனமானது இந்தக் குறுங்கோள் சுரங்க இயந்திர மனிதனை விண்வெளிக்குக் கொண்டு செல்ல இருக்கின்றது.
இந்தத் திட்டமானது விண்வெளி வளத் தொழிற்துறையில் ஒரு மைல் கல்லாக இருக்கும்.
மிகச் சிறிய, 30 கிலோ கிராம் எடை கொண்ட இந்தச் செயற்கைக் கோள் ஆனது 500 கிலோ மீட்டர் உயரத்தில் சூரிய ஒத்திசைவுச் சுற்றுவட்டப் பாதையில் நுழைய இருக்கின்றது.
இந்த இயந்திர மனிதன் எந்தவொரு சுரங்க நடவடிக்கையிலும் ஈடுபடாது. ஆனால் இது தொழில்நுட்பங்களை மட்டுமே ஆய்வு செய்யவுள்ளது.