ஜப்பானியப் பொதுப் பன்னாட்டு நிறுவனமானது ‘சூசோ பிரண்டியர்’ என்ற பெயரைக் கொண்ட கடலில் செல்லும் உலகின் முதலாவது திரவ ஹைட்ரஜன் போக்குவரத்துக் கப்பலை அறிமுகப் படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் உற்பத்தி செய்யப் படும் மைனஸ் 253°C என்ற அளவுள்ள திரவ ஹைட்ரஜனை ஜப்பானின் கோபிபே நகரத்திற்கு கொண்டுச் சேர்ப்பதற்காக இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
நீர் மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவது போன்ற பல்வேறு வழிகள் உட்பட ஹைட்ரஜனை உற்பத்தி செய்யலாம். பின்னர் அதனைச் சேமித்து மற்றொரு இடத்திற்கு அனுப்பி, அதனை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.