உலகின் முதலாவது துகள்மப் பொருள்கள் வர்த்தகம் – குஜராத்
September 25 , 2019 1891 days 754 0
துகள்மப்பொருள் உமிழ்வுகளை வர்த்தகம் செய்வதற்காக “உலகின் முதலாவது சந்தை” என்று கூறப்படும் ஒரு திட்டத்தை குஜராத் அரசாங்கம் தொடங்கியுள்ளது.
இந்தத் துகள்மப்பொருள்உமிழ்வு வர்த்தகத் திட்டம் (emission trading scheme - ETS) சூரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
ETS ஆனது பின்வருவனவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒரு பகுதியில் மாசுபாட்டின் அளவைக் குறைத்தல்
தொழில் துறைக்கான இணக்க செலவைக் குறைத்தல்.
குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியமானது (Gujarat Pollution Control Board - GPCB) அனைத்துத் தொழில் துறைகளிலிருந்தும் வெளியேறும் மொத்த உமிழ்வின் உச்சபட்ச அளவை நிர்ணயிக்கின்றது.
இந்த உச்சபட்ச அளவின் கீழ், வர்த்தக அனுமதிகள் மூலம் (கிலோகிராமில்) பல்வேறு தொழிற்சாலைகள் இந்தத் துகள்களை வெளியேற்றும் திறனை வாங்கலாம் மற்றும் விற்கலாம்.
இந்தக் காரணத்திற்காக, ETS ஆனது ஒரு உச்சபட்ச மற்றும் வர்த்தக சந்தை என்றும் அழைக்கப்படுகின்றது.