TNPSC Thervupettagam

உலகின் முதல் ஆளில்லாத விமானத்துடன் கூடிய மீட்பு திட்டம்

January 20 , 2018 2373 days 725 0
  • நியூ சவுத் வேல்ஸின் பொங்கி எழும் அலைகளில் மாட்டிக் கொண்ட சில நீச்சல் வீரர்களை காப்பாற்ற ஆஸ்திரேலிய பாதுகாப்பு நிறுவனத்தால் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • மீட்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட சிறிய கிழிப்புரக ஆளில்லா விமானம் (Little Ripper unmanned aerial vehicle) என்று அறியப்படும் இந்த விமானம் வரும் கோடைக் காலங்களில் ஆஸ்திரேலிய கடற்கரைகளில் ஆரம்பிக்கப்பட இருக்கும் சுறாமீன் கண்டுணர் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது.
  • இது சுறாமீன்களை தன்னிச்சையாக கண்டுணர அல்கோரிதம் (Algorithm) என்ற வழிமுறையைப் பயன்படுத்துகிறது.
  • இந்த சம்பவம் உலகில் முதன்முறையாக நீரில் உயிர்காக்கும் நடவடிக்கைக்காக ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியமையை குறிப்பிடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்