TNPSC Thervupettagam

உலகின் முதல் எண்ணெய் திமிங்கல வளங்காப்பகம்

November 20 , 2023 373 days 345 0
  • கரீபியன் தீவான டொமினிகா நாடானது, பூமியின் மிகப்பெரிய விலங்குகளில் ஒன்றான அழிந்து வரும் எண்ணெய் திமிங்கலத்திற்காக உலகின் முதல் பாதுகாக்கப் பட்ட கடல்சார் பகுதியை உருவாக்கி வருகிறது.
  • இந்த தீவு தேசத்தின் மேற்குப் பகுதியில் சுமார் 300 சதுர மைல்கள் வரையிலான (800 சதுர கிமீ) கடல்நீர் பரப்பானது, வளங்காப்பு பகுதியாகக் குறிப்பிடப்படும்.
  • டொமினிகாவைச் சுற்றியுள்ள கடல் பரப்பில் சுமார் 500க்கும் குறைவான எண்ணெய் திமிங்கலங்கள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • எண்ணெய் திமிங்கலங்கள் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை குட்டி ஈனும்.
  • முந்தையக் காலங்களில், சுமார் 2 மில்லியன் எண்ணெய் திமிங்கலங்கள் பூமியின் ஆழ்கடல் நீரில் சுற்றித் திரிந்த நிலையில் தற்போது சுமார் 800,000 திமிலங்களே மீதம் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்