TNPSC Thervupettagam

உலகின் முதல் ஐரோப்பிய அழுத்த அணுசக்தி உலை

June 13 , 2018 2228 days 650 0
  • தெற்கு சீனாவின் தைஷானில் உள்ள மூன்றாம் தலைமுறை ஐரோப்பிய அழுத்த உலையானது (European Pressurised Reactor- EPR) தனது முதல் அணுசக்தி சங்கிலித் தொடர் செயல்வினையை மேற்கொண்டுள்ளது.
  • இந்த தைஷான் அணுசக்தி நிலையத்தின் முதல் யூனிட்டானது முதல் முறையாக நீடித்த சங்கிலித் தொடர் செயல்வினையை அடைந்துள்ளது. இதன் மூலம் செயல்பாட்டை துவங்குதல் எனும் மைல்கல்லை எட்டியுள்ள உலகின் முதல் ஐரோப்பிய அழுத்த உலையாக இது உருவாகியுள்ளது.
  • பின்லாந்து மற்றும் பிரான்ஸில் உள்ள ஐரோப்பிய அழுத்த உலைகள் பின்னடைவை சந்தித்து வருகின்ற வேளையில் தைஷான் 1 உலையானது இத்தகு முதல் செயல்பாட்டுத் தொடக்கத்தை அடைந்துள்ளது.
  • தைஷான் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவை சீனாவில் கட்டப்பட உள்ள ஐரோப்பிய அழுத்த உலை வடிவமைப்பு அடிப்படையிலான முதல் இரண்டு அணுசக்தி உலைகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்