TNPSC Thervupettagam

உலகின் முதல் ஒற்றை மின்னேற்றி விதிமுறை

October 15 , 2022 647 days 312 0
  • ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 2024 ஆம் ஆண்டிற்குள் மின்னணு சாதனங்களுக்கான ஒற்றை மின்னேற்றிக் கலத்தினை அறிமுகப்படுத்தும் ஒரு புதிய விதிக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • அனைத்துப் புதிய திறன்பேசிகள், வரைபட்டிகைகள் மற்றும் ஒளிப்படக் கருவிகள் ஒரே மாதிரியான மின்னேற்றியினைக் கொண்டிருக்கும் என்று அந்த விதிகள் கூறுகிறது.
  • இந்தப் புதிய விதிகள் ஆனது, வாடிக்கையாளர்கள் ஒரு கையடக்கச் சாதனத்தை வாங்கும் போது USB-C வகை முனையத்தைக் கொண்ட ஒரு மின்னேற்றி மற்றும் அந்த வகை இல்லாத ஒன்று ஆகிய இரண்டு மின்னேற்றிகளில் ஒன்றைத் தேர்வு செய்ய வழி வகை செய்கிறது.
  • 2026 ஆம் ஆண்டு முதல், மடிக்கணினிகளும் இந்த விதிமுறைக்குள் உள்ளடக்கிய வகையில் இந்த விதிகள் விரிவுபடுத்தப்படும்.
  • இந்தப் புதிய சட்டம் மின்-கழிவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டதோடு வாடிக்கையாளர்களுக்கு மேலும் சில நிலையானத் தேர்வுகளை வழங்குவதற்கான  வாய்ப்பினையும் அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்