உலகின் முதல் முழு அளவிலான மிதக்கும் காற்றாலைப் பண்ணை ஸ்காட்லாந்தின் வடகிழக்கு கடற்கரையில் கட்டப்பட்டுவருகிறது.
ஹை வைண்ட் என அறியப்படும் காற்றாலை மின்சாரப் பண்ணை 20,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் ஒரு சோதனை திட்டமாகும்.
காற்றாலையின் அடித்தளம் தரையில் படவேண்டிய அவசியம் இல்லாததால், இவ்வகை காற்றாலைகளை ஆழ்கடலில் காற்று இருக்கும் பகுதிகளில் நிறுவி, மின்சாரம்உற்பத்தி செய்யமுடியும்.