அமெரிக்க விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான ராக்கர் ஆய்வகம் (Rocker Lab) நியூசிலாந்தில் உள்ள தன்னுடைய தனியார் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து விண்வெளிக்கு மூன்று சிறிய செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது.
இதன் மூலம் அரசு விண்வெளி நிறுவனங்களின் எத்தகு உதவியுமின்றி,செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள உலகின் முதல் தனியார் நிறுவனமாக ராக்கர் ஆய்வகம் புகழ் பெற்றுள்ளது.
150 கிலோகிராம் வரையிலான சிறிய எடைகளை மட்டும் சுமக்கும் எலக்ட்ரான் இராக்கெட்டினால் விண்வெளியில் செலுத்தப்பட்டுள்ள இம்மூன்று செயற்கைக் கோள்களுள் ஒன்று புவியினை படம் பிடிக்கும். பிற இரு செயற்கைக்கோள்கள் வானிலை ஆய்வு மற்றும் கப்பல் வழிப்பயண கண்காணிப்பு போன்ற செயல்பாடுகளில் ஈடுபடும்.