உலகின் முதல் திரவ நுண் யூரியா ஆலை
June 6 , 2022
777 days
602
- குஜராத்தின் கலோல் நகரில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் திரவ நுண் யூரியா ஆலையைப் பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
- இது நுண் துகள் வடிவில் உள்ள யூரியா ஆகும்.
- திரவ நுண் யூரியாவை நேரடியாக இலைகளில் தெளிப்பதால் அது நேரடியாகச் செடியால் உறிஞ்சப் படும்.
- யூரியா ஒரு இரசாயன நைட்ரஜன் உரமாகும்.
- இது தாவரங்களுக்கு மிகவும் தேவையான ஒரு முக்கிய ஊட்டமான நைட்ரஜனைச் செயற்கையாக வழங்குகிறது.
- உலகிலேயே அதிகளவில் யூரியாவினைப் பயன்படுத்தும் இரண்டாவது பெரிய நாடு இந்தியா ஆகும்.
- ஆனால் யூரியா உற்பத்தியில் மூன்றாவது இடத்திலேயே உள்ளது.
Post Views:
602