மாற்றங்களுடைய ஒளி நுண்ணறிவு தொழில்நுட்பத்தோடு கூடிய (Transitions Light Intelligent Technology) அகுவ் ஒயாசிஸ் (Acuvue Oasys) தொடு வில்லைகளின் (Contact Lenses) பயன்பாட்டிற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப் பொருள் நிர்வகிப்பு அமைப்பு (Food and Drug Administration- FDA) அனுமதி வழங்கியுள்ளது.
பிரகாசமான ஒளி வெளிச்சத்திற்கு ஆட்படும் போது தானாக இருட்டிடக் கூடிய உலகின் முதல் தொடு வில்லை இதுவாகும்.
சூரிய கண் கண்ணாடிகளில் (eyeglasses) பயன்படுத்தப்படும் சூரிய வெளிச்சத்தின் போது தானாக கருமையாகி இருட்டிடக் கூடிய அதே தொழிற் நுட்பத்தைக் கொண்டுள்ள உலகின் முதல் தொடு வில்லை இதுவாகும்.