TNPSC Thervupettagam

உலகின் முதல் நம்பகமான டிஜிட்டல் களஞ்சியம்

March 23 , 2018 2442 days 834 0
  • ISO 16363: 2012 தரத்தின்படி மத்தியக் கலாச்சார அமைச்சகத்தின் தேசியக் கலாச்சார ஒலி-ஒளி ஆவணக் காப்பகத் திட்டம் உலகின் முதல் நம்பகமான டிஜிட்டல் களஞ்சியம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது.
  • இந்த சான்று இங்கிலாந்தைச் சேர்ந்த முதன்மையான நம்பகமான டிஜிட்டல் களஞ்சிய அங்கீகார அமைப்பால் (Primary Trustworthy Digital Repository Authorization Body Ltd - PTAB) வழங்கப்பட்டது.

தேசிய கலாச்சார ஒலி-ஒளி ஆவணக் காப்பகம்

  • தேசிய கலாச்சார ஒலி-ஒளி ஆவணக் காப்பகம், கலைகளுக்கான இந்திரா காந்தி தேசிய மையத்தால் செயல்படுத்தப்பட்டது.
  • ஒலி-ஒளி வடிவில் கிடைக்கும் இந்தியக் கலாச்சாரப் பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்குதல் மூலம் அடையாளப்படுத்துதல் மற்றும் அதை பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது. மேலும், இவற்றை மக்களுக்கு அணுகக் கூடிய வகையில் ஏற்படுத்தித் தருவதையும் நோக்கமாகக் கொண்டது.
  • இத்திட்டத்தால் பின்பற்றப்படும் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மெட்டா டேட்டாத் தர நிலைகள், திறந்தநிலை காப்பகத் தகவல் அமைப்பு (Open Archival Information System – OAIS) மாதிரியின் ஒட்டுமொத்தக் கட்டமைப்புக்கு உட்பட்ட சர்வதேசத் தரநிலைகளுடன் சமநிலையில் இருக்கும்.
  • டிஜிட்டல் மயமாக்கல் தரநிலைகள், ஒலி- ஒளி காப்பகங்களுக்கான சர்வதேச -சங்கத்தின் வரையறைகளின் படி அமைந்துள்ளன.
  • மெட்டாடேட்டாத் திட்டமானது டப்ளின் கோர், கலைக்காட்சிக் கூடங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றிற்கு உலகளவில் விரிவுபடுத்தப் பட்டுள்ளன.

கலைகளுக்கான இந்திராகாந்தி தேசிய மையம்

  • இது கலை, மனிதநேயம் மற்றும் கலாச்சாரப் பண்பாடு ஆகியவற்றை சேமித்து வைக்கும் தரவு வங்கிக்கான முதன்மை நிறுவனம்.
  • தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கலை, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைமுறை தொடர்பான மண்டல தரவுத்தளத்தின் மேம்பாட்டிற்கான முதன்மை நிறுவனமாகவும் யுனெஸ்கோவினால் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.
.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்