புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்துப் பெறப்படும் வெப்ப ஆற்றலைச் சேமித்து வைக்கக் கூடிய உலகின் முதல் மணல் மின்கலனைப் பின்லாந்து நிறுவி உள்ளது.
இது நகரின் மையப்படுத்தப்பட்ட வெப்ப ஆற்றல் சார்ந்த கட்டமைப்புடன் இணைக்கப் பட்டுள்ளதால் இது நகரத்தின் கட்டிடங்கள் மற்றும் பொதுக் குடிநீர் வழங்கீட்டு அமைப்புகளைச் சூடாக வைத்திருக்க உதவும்.
இந்தச் சேமிப்புக் கலனானது 100 kW வெப்பமாக்க ஆற்றல் மற்றும் 8 MWh திறன் கொண்டது.
"மணல் மின்கலன்" எனப்படும் இந்த உயர் வெப்பநிலை வெப்ப ஆற்றல் சேமிப்புக் கட்டமைப்பில் மணல் அல்லது மணல் போன்ற பொருட்கள் ஆனது சேமிப்பு ஊடகமாகப் பயன்படுத்தப் படுகின்றன.
மணலானது இதில் வெப்ப ஆற்றல் சேமிப்பகமாகச் செயல்படுகிறது.
கூடுதல் காற்று மற்றும் சூரிய ஆற்றலுக்கான உயர் ஆற்றல் மற்றும் உயர் திறன் கொண்ட ஆற்றல் சேமிப்பு அமைப்பாக செயல்படுவதே இதன் முதன்மை செயல்பாடு ஆகும்.
ஆற்றலானது வெப்பமாக மாற்றப்பட்டு, கட்டிடங்களை வெப்பப் படுத்த மற்றும் பிற பயன்பாடுகளுக்காகப் பயன்படுகிறது.