TNPSC Thervupettagam

உலகின் முதல் மறுபதிவு செய்யக் கூடிய வணிக செயற்கைக்கோள்

August 3 , 2021 1119 days 602 0
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது உலகின் முதலாவது மறுபதிவு செய்யக் கூடிய வணிக செயற்கைக் கோளினை விண்ணில் செலுத்த உள்ளது.
  • இது யூடெல்சாட் குவாண்டம் (Eutelsat Quantum) என்று அழைக்கப்படுகிறது.
  • இது ஏரியன் 5 ராக்கெட்டினுடைய விண்வெளி தாங்கு பொருளின் ஓர் அங்கமாக லத்தீன் அமெரிக்காவிலுள்ள கயானா விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப் பட உள்ளது.
  • யூடெல்சாட் குவாண்டம் ஆனது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் கூட்டிணைவுத் திட்டத்தின் கீழ், யூடெல்சாட் மற்றும் மேனுபேக்சரர் ஏர்பஸ் எனும் செயற்கைக்கோள் இயக்குநர் அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டதாகும்.
  • குவாண்டம் செயற்கைக் கோளானது ஆசியா முதல் மேற்கு ஆப்பிரிக்கா வரையில் மிகப்பெரிய புவியியல் பகுதிகளுக்கு 15 ஆண்டு காலம் வரையில் சேவையினை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்