TNPSC Thervupettagam

உலகின் முதல் மீன்பிடிப் பூனைக் கணக்கெடுப்பு

June 8 , 2022 775 days 399 0
  • உலகின் முதல் மீன்பிடிப் பூனைக் கணக்கெடுப்பானது, ஒடிசாவில் உள்ள சிலிக்கா ஏரியில் மேற்கொள்ளப் பட்டது.
  • இது  உலகின் முதல் மீன்பிடிப் பூனைக் கணக்கெடுப்பினை வழங்கியது.
  • இந்த ஏரியில் 176 மீன்பிடிப் பூனைகள் உள்ளன.
  • சிலிக்கா ஏரியானது ஒடிசாவில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய உவர் நீர் ஏரி ஆகும்.
  • மேற்கு வங்காள மாநிலமானது 2012 ஆம் ஆண்டில், மீன்பிடிப் பூனைகளை தனது மாநில விலங்காக அறிவித்தது.
  • சிலிக்கா அதிகாரிகள் 2020 ஆம் ஆண்டில் மீன்பிடிப் பூனைகளை அந்த ஏரியின் தூதர் என்று அறிவித்தனர்.
  • மீன்பிடிப் பூனைகள் உலகம் முழுவதும் அருகி வரும் இனமாக உள்ளன.
  • அவை வாழும் நாடுகளின் எல்லைக்குள், அவை சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) ஆபத்தான நிலையில் உள்ள உயிரினங்கள் அடங்கிய சிவப்புப் பட்டியலில் பாதிக்கப்படக் கூடிய இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • மீன்பிடிப் பூனை என்பது 1972 ஆம் ஆண்டின் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான முதல் அட்டவணையில் இடம் பெற்றுள்ள ஒரு இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்