TNPSC Thervupettagam

உலகின் முதல் மைக்ரோ தொழிற்சாலை

April 14 , 2018 2420 days 722 0
  • இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) பயிற்சி பெற்ற  இந்திய வம்சாவளி ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளரான வீணா சஹஜ்வல்லா உலகின் முதல் மைக்ரோ  தொழிற்சாலையை (Micro factory)  தொடங்கியுள்ளார்.
  • இந்த மைக்ரோ தொழிற்சாலையானது மின்னணு கழிவுப் பொருட்களின் பகுதிகளை மறு பயன்பாட்டிற்கு மதிப்புமிக்க பொருட்களாக (valuable materials)   மாற்ற வல்லது.
  • மிகச் சிறிய பரப்பில் அதாவது 50 சதுர மீட்டர் பரப்பளவில் கழிவுகள் உள்ள தளத்திலேயே (on site)  இயங்கவல்ல மைக்ரோ தொழிற்சாலை இதுவாகும். எங்கெல்லாம் கழிவுகள் குவிக்கப்படுகின்றனவோ அந்தந்த  இடத்திலேயே எளிதாக இந்த மைக்ரோ தொழிற்சாலையை அமைக்க இயலும்.
  • இந்த மின் கழிவு மைக்ரோ தொழிற்சாலையானது கண்ணாடி, பிளாஸ்டிக் போன்ற பல்வேறு வகையான நுகர்வோர் கழிவுகளை மதிப்புமிக்க வர்த்தக பொருட்களாக மாற்றுவதற்கு பசுமைப் பொருள் உற்பத்தி தொழில்நுட்பத்தை (green manufacturing) பயன்படுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்