இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) பயிற்சி பெற்ற இந்திய வம்சாவளி ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளரான வீணா சஹஜ்வல்லா உலகின் முதல் மைக்ரோ தொழிற்சாலையை (Micro factory) தொடங்கியுள்ளார்.
இந்த மைக்ரோ தொழிற்சாலையானது மின்னணு கழிவுப் பொருட்களின் பகுதிகளை மறு பயன்பாட்டிற்கு மதிப்புமிக்க பொருட்களாக (valuable materials) மாற்ற வல்லது.
மிகச் சிறிய பரப்பில் அதாவது 50 சதுர மீட்டர் பரப்பளவில் கழிவுகள் உள்ள தளத்திலேயே (on site) இயங்கவல்ல மைக்ரோ தொழிற்சாலை இதுவாகும். எங்கெல்லாம் கழிவுகள் குவிக்கப்படுகின்றனவோ அந்தந்த இடத்திலேயே எளிதாக இந்த மைக்ரோ தொழிற்சாலையை அமைக்க இயலும்.
இந்த மின் கழிவு மைக்ரோ தொழிற்சாலையானது கண்ணாடி, பிளாஸ்டிக் போன்ற பல்வேறு வகையான நுகர்வோர் கழிவுகளை மதிப்புமிக்க வர்த்தக பொருட்களாக மாற்றுவதற்கு பசுமைப் பொருள் உற்பத்தி தொழில்நுட்பத்தை (green manufacturing) பயன்படுத்துகின்றது.