உலகின் முதல் விண்வெளி அடிப்படையிலான தானியங்கி அடையாள அமைப்பு
August 26 , 2019 1920 days 655 0
வணிகக் கப்பல்களை நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்கும் உலகின் முதல் விண்வெளி அடிப்படையிலான தானியங்கி அடையாள அமைப்பானது இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளால் இணைந்து கட்டப்பட்டு இயக்கப்படவுள்ளது.
பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான CNES மற்றும் இஸ்ரோ ஆகியவை செயற்கைக் கோள்கள் தொகுப்பின் உருவாக்கம் மற்றும் உற்பத்தியைத் தொடங்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.
இந்தத் தொகுப்பானது தொலைத் தொடர்பு தானியங்கி அடையாள அமைப்பு, ரேடார் மற்றும் ஒளியிழை தொலையுணர் கருவிகள் ஆகியவற்றைக் கொண்டது. இது இந்தியப் பெருங்கடலில் கப்பல்களைக் கண்காணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
இந்த செயற்கைக் கோள் அடிப்படையிலான அமைப்பானது இந்தியாவின் கடலோரக் கண்காணிப்பு அமைப்புகளையும் கடல்சார் பாதுகாப்பையும் கணிசமாக உயர்த்தும்.
சர்வதேச கடல்சார் அமைப்பின் கடல்சார் வாழ்வின் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒப்பந்தமானது மொத்தமாக 300 டன் மற்றும் அதற்குமேல் எடையைச் சுமந்து சர்வதேச பயணங்களில் ஈடுபடும் அனைத்துக் கப்பல்களிலும் சர்வதேச பயணங்களில் ஈடுபடவில்லை என்றாலும் மொத்தமாக 500 டன் எடை மற்றும் அதற்கு மேல் உள்ள சரக்குக் கப்பல்கள் அனைத்திலும் அளவுகள் வேறுபாடின்றி அனைத்துப் பயணிகள் கப்பல்களிலும் தானியங்கி அடையாள அமைப்பு பொருத்தப்பட வேண்டும் எனக் கூறுகின்றது.
இந்தியாவானது தொலைதூர அடையாளம் மற்றும் கண்காணிப்பு அமைப்பையும் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்ட தானியங்கி அடையாள அமைப்பையும் நிறுவியுள்ளது. ஆனால் அவற்றின் வரம்பு மற்றும் செயல்பாடுகள் குறைவாகவே உள்ளன.
தொலைதூர அடையாளம் மற்றும் கண்காணிப்பு அமைப்பால் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒரு முறையாவது அல்லது ஒரு நாளைக்கு குறைந்தது 4 முறையாவது கப்பல்களின் நிலையைக் கணிக்க முடியும். அதே வேளையில் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்ட தானியங்கி அடையாள அமைப்பானது 40 கடல் மைல் தூர செயல்பாட்டு எல்லையை மட்டுமே கொண்டுள்ளது.