TNPSC Thervupettagam

உலகின் முதல் 6ஜி செயற்கைக்கோள்

November 16 , 2020 1475 days 581 0
  • சீனா வெற்றிகரமாக "உலகின் முதலாவது 6ஜி செயற்கைக் கோளை" விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.
  • இது ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தைவான் செயற்கைக்கோள் செலுத்து மையத்திலிருந்து விண்வெளி சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது.
  • இது சீனாவின் லாங் மார்ச் என்ற செயற்கைக் கோள் தொடரின் 351வது ராக்கெட் ஆகும்.
  • 6ஜி தொழில்நுட்பம் 5ஜி தொழில்நுட்பத்தை விட 100 மடங்கு வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இது விண்வெளியில் டெராஹெர்ட்ஸ் அலைகளின் தொழில்நுட்பத்தைச் சோதிக்கும்.
  • டெராஹெர்ட்ஸ் அலைகள் உயர் அதிர்வெண் கதிர்வீச்சு (high-frequency radiation) அலைகள் ஆகும்.
  • இது ஒரு விநாடிக்கு 50 ஜிகாபிட் என்ற வேகத்தில் தரவைக் கடத்த அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்