அல்ஜீரியா நாட்டில் உலகின் மூன்றாவது பெரிய மற்றும் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய மசூதி திறக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் ஜமா எல்- ஜாசீர் என அறியப்படும் இந்த மசூதியானது 120,000 பேர் ஒரே நேரத்தில் இறை தொழுதலை மேற்கொள்ளக் கூடிய அளவிலானது மற்றும் 265 மீட்டர் (869 அடி) உயரம் கொண்ட உலகின் மிக உயரமான ஸ்தூபியினைக் கொண்டுள்ளது.
சவுதி அரேபியாவில் அமைந்துள்ள மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள இஸ்லாமியத்தின் புனிதத் தலங்களுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய மசூதி இதுவேயாகும்.