உலகின் மூன்றாவது பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் – இந்தியா
July 31 , 2017 2674 days 1064 0
அறிக்கையின் பெயர்: OECD-FAO வேளாண்மைக் கண்ணோட்டம் அறிக்கை 2016-2026.
அறிக்கையினை நடத்திய அமைப்புகள்:
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு - The Food and Agriculture Organization of the United Nations (FAO)
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு - Organisation for Economic Co-operation and Development (OECD)
உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த நிலைப்பாட்டை அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்தியா தக்க வைக்கும் என்று OECD-FAO வேளாண்மைக் கண்ணோட்டம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியா , சுமார்1.56 மில்லியன் டன் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டு இந்திய93 டன் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து , உலக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 16 சதவீதம் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதி செய்யப்பட்ட மாட்டிறைச்சியின் வகைகள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இந்தியாவில் இருந்து மியான்மர் நாட்டிற்கு அதிக அளவில் எருமை மாடுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது . நாட்டின் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் , எருமை மாடுகளின் ஏற்றுமதி பெரும்பங்கு வகிக்கின்றது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தரவுத்தளத்தின் படி, கடந்த ஆண்டில் இந்தியா 363,000 டன் மாட்டிறைச்சியை இறக்குமதி செய்துள்ளது.
அதிக அளவில் மாட்டிறைச்சிஏற்றுமதி செய்யும் நாடுகளின் தரவரிசை: