உலகின் பழமையான 62 வயதான சுமத்ராவின் ஒரங்குட்டான் ஆஸ்திரேலியப் பூங்காவில் மரணமடைந்தது. இது 54 வழித் தோன்றல்களை விட்டுச் சென்றது.
புவான் (Puan) எனும் பெயர் கொண்ட இந்த ஓரங்குட்டான் பெர்த் பூங்காவின் “பெரும் வயதான பெண்” என்று விவரிக்கப்படுகிறது. வயது சம்பந்தமான பிரச்சனைகளுக்காக அது கருணைக் கொலை செய்யப்பட்டது.
இது 1968-ஆம் ஆண்டு முதல் பூங்காவில் உள்ளது. இது 2016-ம் ஆண்டு அதன் இனத்திலேயே பழமையானதாக கின்னஸ் உலக சாதனையாக அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
இது உயர் அச்சுறுத்தல் நிலையில் உள்ளது. இது அரிதாக 50 வயதை எட்டும்.
உலக வன உயிர் நிதியத்தின் (WWF-World Wildlife Fund for Nature) கணக்கீட்டின் படி சுமத்ராவின் ஒரங்குட்டான்கள் 14600 எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன.