2017 ஆம் ஆண்டிற்கான குளோபல் ஃபயர் பவர் குறியீட்டின்படி (Global Fire Power Index-2017) உலகின் வலிமையான ராணுவங்கள் தரவரிசைப் பட்டியலில் 133 நாடுகளுள் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் பரம போட்டியாளரான பாகிஸ்தான் இப்பட்டியலில் 13வது இடத்தில் உள்ளது.
முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா, இரஷ்யா, மற்றும் சீனா உள்ளது.
மேலும் இந்த அறிக்கையின் படி, பிரெஞ்ச், ஜெர்மன், இங்கிலாந்து, ஜப்பான், இஸ்ரேல் ஆகியவை முதல் 15 இடங்களில், இந்தியாவிற்கு பின் நிலையில் உள்ளன.
ராணுவ ஆதாரங்கள் (Military resources), படை வீரர்கள் எண்ணிக்கை, பட்ஜெட் நிதி ஒதுக்கீடு, இயற்கை வளங்கள், புவியியல் அம்சங்கள் உள்ளிட்ட 50 காரணிகளின் அடிப்படையில் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இக்குறியீட்டிற்கான கணக்கீட்டில் அணு ஆயுதங்கள் எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படவில்லை. இருப்பினும் அங்கீகரிக்கப்பட்டுள்ள அல்லது சந்தேகத்திற்குரிய அணு ஆயுதங்களுக்கு மதிப்பீட்டு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.