நியூ வோல்டு வெல்த் (New World Wealth) அமைப்பானது உலகின் பணக்கார நகரங்கள் (World Wealthiest cities) என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார முனையமான (Economic Hub) மும்பை உலகின் 12-வது பணக்கார நகரமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
அதிகமான கோடீஸ்வரர்களை (Billionaire) கொண்ட நகரங்கள் பட்டியலில் மும்பை 10-வது இடத்தில் உள்ளது.
15 நகரங்களின் வளத்தை பட்டியலிட்டுள்ள இந்த அறிக்கைப்படி மொத்தம் 3 டிரில்லியன் வளத்தைக் கொண்டு நியூயார்க் முதலிடம் பிடித்துள்ளது.
பட்டியலிடப்பட்டுள்ள 15 நகரங்களுள் கடந்த பத்தாண்டுகளில் பெற்ற செல்வங்களின் வளர்ச்சியின் அடிப்படையில் வேகமான வளர்ச்சியுடைய நகரங்களாக சான் பிரான்சிஸ்கோ, பெய்ஜிங், ஷாங்காய், மும்பை மற்றும் சிட்னி ஆகிய நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.