ஆக்ஸ்போர்டு பொருளாதாரவியல் அறிக்கையின்படி, 2019 முதல் 2035 வரை உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முதல் 10 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.
குஜராத்தின் சூரத் அப்பட்டியலின் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து உத்திரப் பிரதேசத்தின் ஆக்ரா மற்றும் கர்நாடகாவின் பெங்களூரு ஆகியவை உள்ளன.
2035 அளவில் ஆசிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது அனைத்து வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நகர மையங்களை விட 17% அதிகமாக இருக்கும்.
மும்பை உலகில் 12-வது பணக்கார நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றிற்கு அடுத்து உலகின் 6-வது மிகப்பெரிய வளமான சந்தையாக (மொத்த வளங்களின் அடிப்படையில்) இந்தியா உள்ளது.
தான்சானியாவின் துறைமுக நகரமான தார் எஸ் சலாம் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆப்பிரிக்க நகரமாகும். அதே வேளையில் ஐரோப்பாவின் முதலிடத்தில் அர்மேனியாவின் தலைநகரமான யேரவன் உள்ளது.
வட அமெரிக்காவின் சிறந்த நகரமாக சிலிக்கான் வேலிக்கு மாற்றான சான் ஜோஸ் நகரம் இருக்கும்.