உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை 2024
July 31 , 2024 115 days 169 0
2023 ஆம் ஆண்டில் உலகளவில் 733 மில்லியன் மக்கள் அல்லது 11 பேரில் ஒருவர் பட்டினி நிலையினை எதிர்கொண்டுள்ளனர்.
பட்டினி நிலையில்லாத உலக நாடுகள் என்ற இரண்டாவது நிலையான மேம்பாட்டு இலக்கினை (SDG) அடைவதற்கு உலக நாடுகள் வெகு தொலைவில் உள்ளன.
2023 ஆம் ஆண்டில் 713 முதல் 757 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 2019 ஆம் ஆண்டை விட சுமார் 152 மில்லியன் அதிகமாகும்.
2023 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் 28.9 சதவீதம் பேர் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலையில் இருந்தனர்.
பட்டினி நிலையினை எதிர்கொள்ளும் மக்கள்தொகை சதவீதமானது ஆப்பிரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது (20.4 சதவீதம்) என்ற நிலையில் இது ஆசியாவில் (8.1 சதவீதம்) நிலையானதாக உள்ளது என்பதோடு லத்தீன் அமெரிக்காவில் (6.2 சதவீதம்) முன்னேற்றத்தினையும் கொண்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில், உலகளவில் சுமார் 2.33 பில்லியன் மக்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டனர்.
கடந்த பத்தாண்டுகளில் 12.1 சதவீதமாக (2012) இருந்த இளம் வயதினரில் காணப்படும் அதிக உடல் பருமன் மதிப்பீடுகள் ஆனது 15.8 சதவீதமாக (2022) அதிகரித்திருப்பது ஒரு நிலையான உயர்வைக் காட்டுகின்றது.