உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தின் நிலை
July 18 , 2019 1959 days 675 0
ஐக்கிய நாடுகள் உணவு & வேளாண் அமைப்பு (FAO - UN Food and Agriculture Organization) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO - World Health Organization) உள்ளிட்ட இதர ஐ.நா. அமைப்புகள் இணைந்து “உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த நிலை” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
உணவு இல்லாமல் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கையானதுத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. தற்போது 820 மில்லியனுக்கும் மேலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.
உலகில் வளர்ச்சிக் குன்றிய 10 குழந்தைகளில் 9 குழந்தைகள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ளனர். ஆப்பிரிக்காவில் 39.5 சதவிகித குழந்தைகளும் ஆசியாவில் 54.9 சதவிகிதக் குழந்தைகளும் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர்.
இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கையானது 2004-06 ஆம் ஆண்டில் 253.9 மில்லியனிலிருந்து 2016-18 ஆம் ஆண்டில் 194.4 மில்லியனாகக் குறைந்துள்ளது.
இந்தியாவில் வறுமைக் குறைவு விகிதம் 1987 ஆம் ஆண்டில் 48.9 சதவிகிதமாகவும் 2011 ஆம் ஆண்டில் 21.2 சதவிகிதமாகவும் 2015 ஆம் ஆண்டில் 13.4 சதவிகிதமாகவும் இருந்தது.