TNPSC Thervupettagam

உலகில் நீண்ட நேரம் உழைப்பவர்கள் - மும்பை தொழிலாளர்கள்

June 13 , 2018 2231 days 639 0
  • UBS என்ற சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வருட அளவில் நீண்ட நேரம் பணிபுரியும் நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் நிதித் தலைநகரமான மும்பை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்த அறிக்கை, சராசரியாக ஒரு மும்பைவாசி வருடத்திற்கு7 மணி நேரம் வேலை செய்வதாக கூறுகின்றது. இந்தப் பட்டியலில் புதுதில்லி 4-வது இடத்திலும், பகோடா 5-வது இடத்திலும் உள்ளன.

  • கணக்கெடுப்பு செய்யப்பட்ட 73 நகரங்களில் வருட அளவில் பணிபுரியும் நேரத்தோடு தொடர்புடைய சம்பாதிக்கும் நிலைக்கான பட்டியலில் ஹனோய் (2691.4 மணி நேரம்) மற்றும் மெக்சிகோ (2622.1 மணி நேரம்) ஆகிய நகரங்களில் உள்ள தொழிலாளர்கள் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளனர்.
  • பட்டியலில் 75-வது மற்றும் 76-வது இடங்களைப் பிடித்த ஐரோப்பிய நகரங்களான பாரீசும், ரோமும் முதல் 3 நகரங்களில் வேலை செய்பவர்களின் வருடாந்திர நேரத்தில் ஏறக்குறைய பாதியளவு நேரத்தை மட்டுமே கொண்டிருக்கின்றன.
  • இவ்வறிக்கை, ஜீரிச் நகரம் மிக அதிக செலவாகும் நகரமென்றும் கெய்ரோ மிக மலிவான நகரமென்றும் கூறுகின்றது.
  • மொத்த வருவாய் அளவுகளில் ஜெனீவா முதல் இடத்திலும், புதுதில்லி, மும்பை, கெய்ரோ ஆகிய மூன்று நகரங்கள் கடைசி இடங்களிலும் உள்ளன.
  • மக்களின் தனிநபர் வாங்கும் சக்தியைப் பொறுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் முதல் இடத்திலும், லாகோஸ் நகரம் கடைசி இடத்திலும் உள்ளன.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்