TNPSC Thervupettagam

உலகில் முதல் முறையாக வாயுக்களை வெளியிடும் மாடுகள் மீது கார்பன் வரி

July 1 , 2024 146 days 284 0
  • டென்மார்க் கால்நடை விவசாயிகளின் பசுக்கள், செம்மறி ஆடுகள் மற்றும் பன்றிகள் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்களுக்கு 2030 ஆம் ஆண்டு முதல் வரி விதிக்க உள்ள முதல் நாடு ஆக மாறியுள்ளது.
  • புவி வெப்பமடைதலுக்குப் பங்களிக்கும் சக்தி வாய்ந்த வாயுக்களில் ஒன்றான மீத்தேன் உமிழ்வின் முக்கிய ஆதாரத்தினை இந்த வரி இலக்காகக் கொண்டுள்ளது.
  • 1990 ஆம் ஆண்டில் இருந்த பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 2030 ஆம் ஆண்டிற்குள் 70% குறைக்க டென்மார்க் அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • மீத்தேன் தாக்கம் ஆனது, கார்பன் டை ஆக்சைடின் தாக்கத்தினை விட குறைவாக விவாதிக்கப்பட்டாலும், 20 வருட காலப்பகுதியில் சுமார் 87 மடங்கு அதிக வெப்பத்தை உட்கிரகித்து வைக்கிறது.
  • ஒரு மாடு ஆண்டிற்கு முதன்மையாக ஏப்பம் விடுதல் மூலம் 200 கிலோ மீத்தேன் வரை, உருவாக்குகிறது.
  • டென்மார்க் நாட்டில் ஒரு பொதுவான பசு ஆண்டிற்கு 6 மெட்ரிக் டன் (6.6 டன்) கார்பன் டை ஆக்சைடிற்கு சமமான மீத்தேன் வாயுவினை உற்பத்தி செய்கிறது.
  • நியூசிலாந்து 2025 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரும் வகையில் இதே போன்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றியது ஆனாலும் கடுமையான விமர்சனங்கள் மற்றும் அரசாங்க மாற்றத்திற்குப் பிறகு அது ரத்து செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்