உலக வங்கியானது 2021 ஆம் ஆண்டு உலக ஃபின்டெக்ஸ் தரவுத் தளத்தை வெளியிட்டு உள்ளது.
123 நாடுகளில் உள்ள மக்கள் வங்கி அட்டைகள், தானியங்குப் பண வழங்கீட்டு இயந்திரங்கள், கைபேசிகள் மற்றும் இணையம் போன்ற முறையான மற்றும் முறை சாரா நிதிச் சேவைகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை இது ஆய்வு செய்தது.
உலகளவில், 2021ஆம் ஆண்டில் 76 சதவீத வயது வந்தோர் வங்கி அல்லது ஒழுங்கு படுத்தப் பட்ட நிறுவனத்தில் கணக்கு வைத்துள்ளனர்.
இதில் கடன் சங்கம், நுண்நிதி நிறுவனம் அல்லது கைபேசி வழியிலான பணச் சேவை வழங்கும் நிறுவனம் ஆகியவை அடங்கும்.
வங்கிக் கணக்கு இல்லாத வயது வந்தோர் பிரிவினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் நிதி நிறுவனத்தில் கணக்கைத் தொடங்கினால், பிறர் உதவியின்றி அதைப் பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளனர்.
இந்தியாவில் முறையாக வங்கியை அணுகுவதற்கான குறைந்த வாய்ப்பு மற்றும் நம்பிக்கையின்மையே உள்ளது.
வயது வந்தோர் பிரிவினர்களில் 80 சதவீதத்தினரின் கணக்கு உரிமைக்கு ஆதார் முக்கியமானப் பங்காற்றியுள்ளது (2011 ஆம் ஆண்டில் இது 35% ஆக இருந்து).
பண உபயோகத்திலிருந்து உடலியல் அடையாளங்கள் சார்ந்த திறன் அட்டைகளுக்கு மாறுவது ஓய்வூதியக் கொடுப்பனவுகளில் இழப்பு ஏற்படுவதை 47% குறைத்துள்ளது.