ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 20 அன்று உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, “அகதிகளுடன் வாழுங்கள், உலக அகதிகள் தினத்தின் போது அதற்கான முயற்சியை எடுங்கள்” என்பதாகும்.
இத்தினம் அகதிகளின் பங்களிப்புகள் மற்றும் நிலைகளை (கதைகளை) அனுசரிக்கின்றது. இத்தினம் அகதிகள் நிலைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையரின் தகவலின்படி, கடந்த ஆண்டின் இறுதியில் 70.8 மில்லியன் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகியோர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜுன் 20 ஆம் தேதியை உலக அகதிகள் தினமாக அனுசரிப்பதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.