இது பல்வேறு துறைகளில் அங்கீகார வழங்கீட்டின் பங்கினை அங்கீகரித்து அதனை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொழில் துறைகளில் போட்டித் திறன், சார்புநிலை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதில் அங்கீகாரத்தின் மதிப்பு மற்றும் நன்மைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர்வதேச ஆய்வக அங்கீகாரக் கூட்டமைப்பு (ILAC) மற்றும் சர்வதேச அங்கீகார மன்றம் (IAF) ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியின் விளைவாக 2007 ஆம் ஆண்டில் இந்த நாள் நடைமுறைக்கு வந்தது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “அங்கீகாரம்: உலகளாவிய வர்த்தகத்தின் எதிர்காலத்தை ஆதரித்தல்” என்பதாகும்.