உலக தபால் தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 அன்று உலகளாவிய தபால் யூனியன் நிறுவப்பட்டதன் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
இதன் நோக்கமானது மக்களின் அன்றாட வாழ்க்கையில் தபால் துறையின் பங்கு பற்றியும் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு அதன் பங்களிப்பு பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
ஆனால் இந்தியாவில் அக்டோபர் 10-ம் நாள் உலக தபால் தினத்தின் நீட்டிப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் உலகளாவிய தபால் யூனியன் (Universal Postal Union-UPU) ஆனது 1874 ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் நகரில் தொடங்கப்பட்டதை நினைவூட்டுகிறது.
UPU ஆனது 1948 ஆம் ஆண்டு ஐ.நா.வின் நிறுவனமாக மாறியது.
இந்நாளானது, ஜப்பானின் டோக்கியோவில் 1969ல் நடைபெற்ற உலகளாவிய தபால் யூனியன் கூடுகையில் அறிவிக்கப்பட்டதிலிருந்து வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.