வாக் ஃப்ரீ பவுண்டேஷனின் அறிக்கையின்படி, உலக அடிமைத்தனக் குறியீட்டில் உலக அளவில் 40.3 மில்லியன் நபர்கள் 2016-ல் நவீன அடிமைத்தனத்திற்கு உள்ளாகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இக்குறியீடு சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு (International Labour Organisation) மற்றும் வாக் ஃப்ரீ பவுண்டேஷனினால் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புடன் (International Organisation for Migration) இணைந்து வெளியிடப்பட்டுள்ளது.
நவீன அடிமைத்தனம் - வன்முறையைப் பயன்படுத்துதல், மோசடி, கட்டாயத் தொழிலாளர், பாலியல் சுரண்டல், உள்நாட்டிலேயே அடிமைப்படுத்துதல் போன்றவற்றில் மக்களை ஈடுபட செய்வதற்கான அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
3 பில்லியன் மக்கட்தொகையில் 8 மில்லியன் அடிமைகளைக் கொண்டு, இந்தியா அதிக எண்ணிக்கையை கொண்டுள்ளது.
வடகொரியா நவீன அடிமைத்தனத்தில் அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. இங்கு 10ல் ஒரு நபர் அடிமை நிலையில் உள்ளனர்.
இந்த பட்டியல் குறியீடு வடகொரியாவிற்குப் பிறகு எரித்ரியா, புரூண்டி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, ஆப்கானிஸ்தான், மௌரிடேனியா, தெற்கு சூடான், பாகிஸ்தான், கம்போடியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை மிகவும் மோசமான குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
354 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சரக்குகளை G20 நாடுகளில் இறக்குமதி செய்ததே இத்தகைய அடிமைத்தனத்திறகுக் காரணம் ஆகும்.
நிலக்கரி, கோகோ, பருத்தி, மரம் மற்றும் மீன் ஆகிய பொருட்களை அந்த சரக்குகளில் இந்த அறிக்கை மேற்கோளிட்டு காட்டுகிறது.