TNPSC Thervupettagam

உலக அடிமைத்தனக் குறியீடு - 2018

July 23 , 2018 2221 days 647 0
  • வாக் ஃப்ரீ பவுண்டேஷனின் அறிக்கையின்படி, உலக அடிமைத்தனக் குறியீட்டில் உலக அளவில் 40.3 மில்லியன் நபர்கள் 2016-ல் நவீன அடிமைத்தனத்திற்கு உள்ளாகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இக்குறியீடு சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு (International Labour Organisation) மற்றும் வாக் ஃப்ரீ பவுண்டேஷனினால் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புடன் (International Organisation for Migration) இணைந்து வெளியிடப்பட்டுள்ளது.
  • நவீன அடிமைத்தனம் - வன்முறையைப் பயன்படுத்துதல், மோசடி, கட்டாயத் தொழிலாளர், பாலியல் சுரண்டல், உள்நாட்டிலேயே அடிமைப்படுத்துதல் போன்றவற்றில் மக்களை ஈடுபட செய்வதற்கான அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
  • 3 பில்லியன் மக்கட்தொகையில் 8 மில்லியன் அடிமைகளைக் கொண்டு, இந்தியா அதிக எண்ணிக்கையை கொண்டுள்ளது.
  • வடகொரியா நவீன அடிமைத்தனத்தில் அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. இங்கு 10ல் ஒரு நபர் அடிமை நிலையில் உள்ளனர்.
  • இந்த பட்டியல் குறியீடு வடகொரியாவிற்குப் பிறகு எரித்ரியா, புரூண்டி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, ஆப்கானிஸ்தான், மௌரிடேனியா, தெற்கு சூடான், பாகிஸ்தான், கம்போடியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை மிகவும் மோசமான குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
  • 354 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சரக்குகளை G20 நாடுகளில் இறக்குமதி செய்ததே இத்தகைய அடிமைத்தனத்திறகுக் காரணம் ஆகும்.
  • நிலக்கரி, கோகோ, பருத்தி, மரம் மற்றும் மீன் ஆகிய பொருட்களை அந்த சரக்குகளில் இந்த அறிக்கை மேற்கோளிட்டு காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்