உலக அடையாளம் காண இயலா பறக்கும் பொருட்கள் தினம் – ஜூலை 02
July 6 , 2023 511 days 186 0
இந்த நாள் என்பது அடையாளம் காண இயலா பறக்கும் பொருட்கள் (UFO) மற்றும் நமது கிரகத்திற்கு அப்பால் வேற்று கிரகத்தில் உயிர்கள் இருப்பதைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தினமானது முதன்முதலில் 2001 ஆம் ஆண்டில் அடையாளம் காண இயலா பறக்கும் பொருட்கள் குறித்த ஒரு துருக்கிய ஆராய்ச்சியாளர் ஹக்டன் அக்டோகன் என்பவரால் அனுசரிக்கப்பட்டது.
1947 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதியன்று, அமெரிக்க விமானி கென்னத் அர்னால்ட் வாஷிங்டனில் உள்ள மவுண்ட் ரெய்னர் அருகே பல அடையாளம் காண இயலா பறக்கும் பொருட்களை கண்ட நாளன்று தான் இவை முதன்முறையாக தென்பட்டன.
இரண்டாவது முறையாக 1952 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதியன்று, ரேடார் இயக்க வல்லுநர்கள் வாஷிங்டன் பகுதிகளில் பல அடையாளம் காண இயலா பறக்கும் பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தினர்.